Oct 2, 2012

MAKE MOZILLA 10x TIMES FASTER


THIS IS A VERY SIMPLE TRICK.....NO SOFTWARE REQUIRED......NO DL REQUIRED

works for broadband users.Try his and enjoy browsing fast

1. Type "about:config" into the address bar and hit enter. Scroll down and look for the following entries:

2. Alter the entries as follows:

Set "network.http.pipelining" to "true"
Set "network.http.proxy.pipelining" to "true"

set "network.http.pipelining.maxre quests" to some number like 30. This means it will make 30 requests at once.

3. Lastly right-click anywhere and select New-> Integer. Name it "nglayout.initialpaint.delay" and set its value to "0 ". This value is the amount of time the browser waits before it acts on information it receives.

Gopi:"i'm not ur dear"

Jan 11, 2012

:::~~2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள் ~~::

சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri):

ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும் (Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால், ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐ போன் 4 எஸ் உடன் கிடைக்கிறது.

வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்து கையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்:

ஸ்மார்ட் போன்களைத் தருவதில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது. மிகக் குறைவான தடிமனில், ஆண்ட் ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப் பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.


3. ஆப்பிள் ஐ-பேட் 2:

தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில், ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து, தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால், மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது, ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4.விண்டோஸ் போன்:

மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும், அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.

காப்பி அண்ட் பேஸ்ட் வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கேமரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற் கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களி டையே கொண்டு வரும் முயற்சி யானது.

மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ்போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.

5. கூகுள் ப்ளஸ்:

ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது. சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை, கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்:

மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக, அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர். நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பாக்ஸைப் பின்னுக்குத் தள்ளி யுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

Dec 21, 2011

Gowtham's Blog: கூகுளில் சில மேஜிக் வார்த்தைகள் [Let it Snow, Tilt...

Gowtham's Blog: கூகுளில் சில மேஜிக் வார்த்தைகள் [Let it Snow, Tilt...: தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை  கொடுத்தால்...

gopi

Gowtham's Blog: விண்டோஸ் 8 கட்டமைப்பு முன்னோட்டம் பதிவிறக்கம்

Gowtham's Blog: விண்டோஸ் 8 கட்டமைப்பு முன்னோட்டம் பதிவிறக்கம்:   விண்டோஸ் 8 முன்னோட்டம் ஒரு ஆரம்ப தொடர்பு இடைமுகத்துடன் முழு விண்டோஸ் அடுத்த தலைமுறை பாருங்கள்,, புதிய டெஸ்க்டாப் பயன்ப...

gopi

Gowtham's Blog: எச்சரிக்கை: புதிய பேஸ்புக் வைரஸ்

Gowtham's Blog: எச்சரிக்கை: புதிய பேஸ்புக் வைரஸ்: இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது...

gopi

Dec 17, 2011

பயனுள்ள சில பிரவுசர்கள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாக பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள்தான் உள்ளன என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி ஆகிய ஐந்து பிரவுசர்கள் மட்டுமே உள்ளன போன்ற தோற்றம் நம்மில் பலரிடையே உள்ளது. ஆனால் இன்டர்நெட் உலகில் இன்னும் பல பிரவுசர்கள், பிரபலமான பிரவுசர்களைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் உள்ளன என்பதே உண்மை.

1.அரோரா (Arora) : விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லினக்ஸ் மற்றும் ஹைக்கு ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக் கூடியது. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். பாப் அப் விளம்பரங்களைத் தடுப்பது, பிரைவேட் பிரவுசிங், அப்போதைய பிரவுசிங் தகவல்களைக் கையாள்வது மற்றும் ஒரு பிரவுசருக்குண்டான பல அடிப்படை வசதிகளைக் கொண்டது. குரோம் இயங்கும் அதே தொழில் நுட்பத்தினையே இந்த பிரவுசரும் பயன்படுத்துகிறது. கூகுள் தொடர்பே வேண்டாம் என்பவர்களுக்கு இது ஒரு மாற்று பிரவுசராகும். சென்ற ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்டது. இதன் பைல் சைஸ் 10.2 எம்.பி. இலவசம்.
இணைய தள முகவரி:
http://code.google.com /p/arora/downloads/list

2.கேமினோ (Camino): மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் பிரவுசர். ஜெக்கோ தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. மேக் பிளாட்பாரத்தில் இயங்கும் அனைத்து பிரவுசர்களுக்கும் இது ஒரு மாற்றாகும். எளிமையான, மிகச் சிறிய அளவில் இடம் பிடித்து இயங்கும் பிரவுசர். நாம் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன.
கிடைக்கும் தள முகவரி :
http://caminobrowser. org/download/

3. பிளாக் (Flock): விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும். பேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ப்ளிக்கர், பிளாக்கர், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் போன்றவற்றிற்கு நேரடி இணைப்பு தருகிறது. இது பயர்பாக்ஸ் பிரவுசர் அடிப்படையில் இயங்குகிறது. எனவே பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தியவர்கள் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் போல பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தினைத் தருகிறது. போட்டோ ஷேரிங், அப்டேட் நியூஸ், தேடல் இஞ்சின் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பைல் அளவு 12.8 எம்.பி.
கிடைக்கும் தள முகவரி:
http://www.flock.com

4. கே–மெலான் (KMeleon): விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இயங்கும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர். இதனை நம் விருப்பத்திற்கேற்றபடி செட் செய்திடலாம். மிகவும் வேகமாக தளங்களைப் பெற்றுத் தருகிறது. ஜெக்கோ தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. ஆங்கிலம் உட்பட ஆறு ஐரோப்பிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இதன் பைல் அளவு 5.8 எம்.பி. மட்டுமே.
கிடைக்கும் இணைய தளம்:
http://kmeleon.sourceforge.net/

5. மேக்ஸ்தான் (Maxthon): இது விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. சீனாவில் இது மிகவும் பிரபலமான பிரவுசராகும். இலவசமாய்க் கிடைக்கும் இந்த பிரவுசரின் பைல் அளவு 6.4 எம்.பி. இதன் டேப் வசதி பிரவுசிங் மிக வேகமாக இயங்குகிறது. ஒரு பிரவுசருக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன.
கிடைக்கும் தள முகவரி:
http://www.maxthon.com /download.htm

6. பேல் மூன் (Pale Moon): விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. ஜெக்கோ இஞ்சினில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. வழக்கமான பிரவுசரைக் காட்டிலும் 25% கூடுதல் வேகம் உடையது என்று இந்நிறுவன அறிக்கை கூறுகிறது.
கிடைக்கும் தள முகவரி :
http://www.palemoon.org

இந்த பிரவுசர் முழுக்க பயர்பாக்ஸ் கட்டமைப்பைக் கொண்டு, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன்ஸ், தீம்ஸ் மற்றும் பெர்சனாஸ் இந்த பிரவுசரிலும் இயங்கும். இதன் பைல் அளவு 7.7 எம்பி.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் உட்பட பல பிரபலமான பிரவுசர்கள், இன்று பலவிதமான வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இது போன்ற அதிக பிரபலமில்லாத சில பிரவுசர்களையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். வைரஸ்கள் தாக்கும் வழிகள் குறைவாகத்தான் இருக்கும்.

WiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்

தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த Wireless Network - WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network - ஐ விளக்குகிறது,




Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;

802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM)  என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.

802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.

மற்றும், நம்முடைய Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.

WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.

Sep 21, 2011

Download mobile softwares for free from 15 top websites

Download mobile softwares for free from 15 top websites

Today mobile phones are one of the most important and useful device which is becoming more and more popular day by day. Everyone has a mobile phone in all the corners of the world no matter it is often used for personal use or for a business purpose.  this is being used by each member of the family even some are using more then one or two also.so, it is important to have a useful softwares at a free of cost for different purpuses and i have create here a list of sites which i usally used where you can download all the free mobile phone stuffs according to your choice.


Sites to Download Mobile Softwares for Free

§  www.gallery.mobile9.com:  This is the one of the good sites which provides free downoading mobile softwares. the main catagories for mobile user are free themes, free ringtones, free wallpaper, free softwares, free videos, free sms and much more with a best quality. you can get free softwares almost all the mobile phones such as nokia, sony ericson, motorola, htc, voice, blackberry,O2, lg, samsung etc.
 
§  www.download.cnet.com:  this site is very popular in worldwide for downloading free softwares of mobile. the site provides a good quality free softwares of blackberry, windows, iphone, palm, symbain, java, android. you can download here free mobile software about browser, business software, communication, developer tools, digital photo sharing, internet, mp3 & audiom phone security and video softwares.
 
§  www.mobileheart.com: Mobileheart is a site where you can download free games,themes, software,wallpapers,screen savers and sms messages. this site also provides a reviews of the latest models of mobile phones launched in market recently and you can check which mobile phone suites you most.
 
§  www.funmaza.com: funmaza is site which is offering the nations with entertainment and free downloads in many catagories which is used by a no.of peoples in different countries aross the web. you can download free latest ringtones, videos,softwares, games and newly uploaded themes for your mobile phones.
 
§  www.brothersoft.com: this is the best site for downloading mobile apps.all the softwares are updated here on daily basis and you can download here a latest collection of free mobile softwares and also enjoy the latest games for your mobile. it is the one of the best free apps store for free downloading business, communication, ebooks, entertainment, mp3 & audio, social networking applications.
 
§  www.mobilclub.org: Mobilclub is a site which provides a free downloading softwares, themes,games,music,wallpaper, videos and themes for mobiles.
 
§  www.mobuniverse.com: Mobuniverse is a very good site for downloading mobile themes, mobile ringtones and mobile softwares for free of cost. the data base of the site is updated on the daily basis and new collection in themes and ringtones are added. as far as downloading softwares you can also check here reviews of new mobile phone launched in the market recently.
 
§  www.crazy4mobilez.com: Crazy4mobilez is one of the best site which is providing a good quality free mobile softwares with just on one click start. also you don’t need to create an account here just grt what you want free of cost at any time, any place. in this site you can able to download a variety of free mobile softwares, free themes,free unloacking codes,free fonts, free pictures mesages and n series app and themes which is being updated on regular basis.
 
§  www.emobilez.com: it is also very good site for downloading free mobile stuffs like software, themes, games, wallpaper, screensaver etc. here you can able to download free mobile softwares, screensavers, themes,games, secret codes of  nokia,sony ericson, blackberry, iphone , antivirus, motorola, windows mobile.
 
§  www.mobilerule.org: you can download free mobile softwares, games, secret codes, ring tone, screen savers, themes, unlocker, videos and wallpapers. the site data is updated daily basis which increses the chances for new mobile stuffs.
 
§  www.cell11.com: this is the one of the most engaging sites in free mobile downloads and you can download anything relates to nokia, samsung, lg, motorola, iphone, pocket pc. the site has a very awesome type of collection in free mobile software, themes, 3gp videos, tips & tricks, wallpapers and mobile fonts.
 
§  www.mobimaza.com: mobimaza is the site where you can download free mp3 ringtones, polyphonic ringtones, 3gp videos, games applications, themes, secret codes and much more.
 
§  www.fsmobilez.com: fsmobilez is a site where you can download nokia free stuff, freebie directory, funny mobilez, mobile themes, symbian softwares and ringtones. you can download jad, jar, six,sisx frmat free mobile games,high quality sceen savers in different resolutions and over 3,000 nokia themes for your mobile phone at free of cost.
 
§  www.free-mobile-software.mobilclub.org: mobilclub provides a good quality mobile softwares, themes, games, video, music, wallpaper, window mobile software at free of cost.
 
§  www.mobilerated.com: Mobilerated is your free and legal site provider of mobile games,puzzles,trivia,productivity apps and other phone applications at free of cost. you can download free mobile phone games and apps without any registration, spam or subscription.
 
 
if u really like this post then you should read some more awesome articles here.

Sep 10, 2011

இன்டர்வியூ

இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல் வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..) 2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்? இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..) 3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்? அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..) 4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன? தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும். 5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்? “அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ம்ம்ம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல்லணும். 6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்? இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..) 7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்? இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..) 8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்? இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.. ஜாஆஆஆஆக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனா சொல்லப்படாது..) 9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன? இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..) 10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா? வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களானு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்குறது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...) 11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா? வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சுடாதீங்க..) 12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா? இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக்கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..) 13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம். 14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்? “ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலைசெய்ய முன்வரும்பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம். 15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா? இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும்.