Jul 3, 2011

Network Topic

   Network எனப்படுவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை இணைப்பது ஆகும். Network இன்மூலம் தகவலை இன்னோர் கணினிக்கு அனுப்பலாம், பெற்றுக்கொள்ளலாம்.
நமது கணினியில் உள்ள Printer, CD- Drive போன்ற வன்பொருட்களை மற்றைய கணினியில் பயன் படுத்தக்கோடியவாறு அமைக்கலாம்.


              Network ஆனது ஒரு குறித்த அறையினிலோ அல்லது அலுவலகத்திலோ அமைக்கப்படலாம்
 
         A network is any collection of independent computers that communicate with one another over a shared network medium.
 

Local Area Network (LAN)

 

         Local Area Network usually confined to a geographic  area, Such As a single building or a college. LAN can be small linking as few as three computers, But often link hundreds of computers. 
 

Metropolition Area Network (MAN)

        Man is basically a bigger resin of a lan and normally uses similar technology. It might corner a group of near by corporate offices or a city and might be either private or public  

Wide Area Network (WAN)

        Often a network is located in multiple physical places. Wide area networking combines multiple lanes that are geographically separate. This is accomplished by connecting the different lens using service, Such as a dedicated leased phone lines, Dial-up phone line C Both synchronous and asynchronous satellite links, and data packet carer services.
gopi

கெளதம் ப்ளாக்: தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெய...

கெளதம் ப்ளாக்: தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெய...: "இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள்...."

gopi

2011 ஆம் ஆண்டின் உலகளவில் பிரபலமான 50 இணையதளங்கள்

உலகளவில் கோடிக்கணக்கான இணையதளங்கள் உள்ளன நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே உள்ளன. கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் தகவல்களை தரும் தளங்களே இறுதிவரை நிலைத்து வெற்றியும் பெறுகின்றன. இது போன்று உலகளவில் அனைவராலும் விரும்பப்பட்டு தர வரிசையில் முதல் ஐம்பது இடத்தை பெற்றுள்ள இணைய தளங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் பாருங்கள். 

இதில் எப்பொழுதும் போல கூகுள் முதலிடத்தில் இருந்தாலும் அதன் வளர்ச்சி சென்ற வருடத்தை விட இந்த வருடம் குறைவாக தான் உள்ளது. ஆனால் பேஸ்புக் சிறப்பான வளர்ச்சியை தொடர்கிறது என்பது குறிப்பிட தக்கது. இணைய தளங்களில் ustream.tv என்ற வீடியோ பகிரும் தளம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த தளம் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 655% வளர்ச்சியை பெற்றுள்ளது.

The Top Websites for April 2011

Rank Website Name Unique Visitors Yearly Change
1 google.com 150,132,536 -0.34%
2 facebook.com 137,917,539 13.33%
3 yahoo.com 137,281,886 2.02%
4 youtube.com 123,404,304 22.42%
5 bing.com 86,836,886 48.43%
6 wikipedia.org 81,157,591 6.01%
7 amazon.com 74,978,780 12.71%
8 msn.com 73,799,209 8.95%
9 live.com 72,369,485 4.21%
10 ebay.com 67,372,294 -10.04%
11 blogspot.com 65,940,748 12.10%
12 microsoft.com 62,162,835 9.19%
13 craigslist.org 57,500,250 -5.52%
14 ask.com 54,508,628 -10.72%
15 go.com 49,504,372 17.32%
16 about.com 47,709,562 3.88%
17 aol.com 46,906,652 2.32%
18 walmart.com 46,349,561 14.15%
19 ehow.com 45,960,705 60.20%
20 answers.com 42,276,025 38.03%
21 mapquest.com 36,700,156 -9.61%
22 target.com 36,178,431 24.64%
23 weather.com 33,728,429 11.58%
24 wordpress.com 33,459,473 1.92%
25 netflix.com 33,129,869 52.15%
26 myspace.com 32,876,686 -53.60%
27 paypal.com 31,870,573 11.06%
28 apple.com 31,103,237 10.79%
29 adobe.com 31,079,363 3.17%
30 twitter.com 27,504,233 -0.75%
31 chase.com 26,432,079 5.86%
32 att.com 25,744,344 12.12%
33 bankofamerica.com 25,671,467 4.82%
34 imdb.com 23,787,667 -2.86%
35 groupon.com 23,768,883 655.82%
36 cnn.com 23,341,250 -13.93%
37 flickr.com 21,514,439 -13.68%
38 photobucket.com 20,523,415 -23.97%
39 comcast.net 20,077,436 57.38%
40 bestbuy.com 19,690,984 -1.66%
41 yellowpages.com 19,683,713 40.39%
42 irs.gov 19,682,366 -4.02%
43 jcpenney.com 19,452,462 33.94%
44 sears.com 19,348,832 25.28%
45 homedepot.com 19,244,361 3.58%
46 verizonwireless.com 18,440,068 11.74%
47 cnet.com 18,405,154 -13.40%
48 comcast.com 18,362,992 60.51%
49 wellsfargo.com 17,984,172 26.90%
50 lowes.com 17,949,686 19.84%
நன்றி : கெளதம் ப்ளாக்.


Jul 2, 2011

உலகின் மிக நீளமான கடல் பாலம் : சீனாவில் திறக்கப்பட்டது!

உலகின் மிக நீளமான கடற் பாலம் சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குயிங்டோ - குவாங்டோ நகர் இடையே மூன்று முனைகளிருந்து இணையும் இப்பாலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சீன பொறியியலாளர்களால் கட்டப்பட்டு வந்தது.
6 வழிச்சாலை கொண்ட இப்பாலத்தின் மொத்த நீளம் 42.4 கி.மீட்டர் ஆகும். மொத்தம் 5,2000 தூண்கள் கடலிருந்து எழுப்பட்டு அதன் மேல் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ள லேக் பான்செண்ட்ரைன் காஸ்வே பாலமே உலகின் மிக நீளமான (37.7கி.மீ) கடல் பாலமாக சாதனை படைத்திருந்தது.

தற்போது அந்த சாதனையை உடைத்து, சீனா தங்களது கட்டுமான திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இப்பாலத்தின் மீது நாளாந்தம் 30,000 க்கும் அதிகளவான கார்கள் சென்றுவரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Jiaozhou Bay பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தை கட்டிமுடிக்க 1 பில்லியன் யூரோ செலவாகியுள்ளது. இப்பாலம் லண்டனில் உள்ள Tower Bridge ஐ போன்று 174 மடங்கு நீளம் கூடியது.

இது கடந்த டிசெம்பர் 22ம் திகதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இதன் தலைமை பொறியியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், கணணியின் கல்குலேஷன் எல்லாம் சரியாக தான் இருக்கிறது.
ஆனால் இரு கரைகளிலிருந்தும் வளர்ச்சி அடையும் பாலம் நடுவில் சரியான மையத்தில் ஒன்று சேர்கிறதா என்ற பயம் கடைசிவரை இருந்தது என தெரிவித்தனர்.
இனி இந்த பாலம் தான் உலகின் மிக நீளமான பாலமாக இருக்க போகிறது எனும் தகவல் இன்னும் சில காலத்துக்கே செல்லுபடி ஆகும். இன்னமும் பத்து வருடங்களுக்குள் இந்த சாதனையை முறியடித்து புதிய கடல் பாலமொன்றை சீனாவின் குவாந்த்தோங் - ஹொங்காங், மாச்சோவ் பகுதிகளை இணைத்து கட்டுகிறது சீனா. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கடந்த டிசெம்பர் மாதம் அறிவித்திருந்தது.

2016 இற்குள் கட்டி முடிக்கப்படவிருக்கும் இப்பாலம் 30 மைல் நீளமானது. 8.0 மேக்னிடூட் நில அதிர்வையும், கடும் தைபூன் சூறாவளியையும் கூட தாங்கும் விதத்தில் இப்பாலம் அமைக்கப்படவிருக்கிறது.

உலகின் மிக நீளமான பெருந்தெருக்கள் பாலமும் சீனாவில் தான் கட்டப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது. Dayang Kunshan எனும் இப்பாலம் ரயில்வே போக்குவரத்துக்கென அமைக்கப்பட்டது. இதன் நீளம் 80 கி.மீ என்பது குறிப்பிடத்தகக்து.
gopi