Jul 2, 2011

விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டா போட்டி நிலவுகிறது. நோக்கியா, சாம்சங், சோனி எரிக்சன் என பல முன்னணி நிறுவனங்கள் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆனாலும், இந்த நிறுவனங்களுக்கு பெரும் சந்தைபோட்டியை நீண்ட காலமாக கொடுத்து வருவது மோட்டோரோலா நிறுவனம்தான்.

குறைந்த விலை, நிறைந்த தரம் என்ற மோட்டோரோலாவின் தாரகமந்திரமே இதற்கு முக்கிய காரணம். சந்தையில் நானும் சளைத்தவன் இல்லை என்பதுபோல் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை களமிறக்க உள்ளது.

இந்த பட்டியலில் முதலில் வர இருப்பது மோட்டோரோலாவின் அட்ரிக்ஸ் 4ஜி மற்றும் டிராய்டு பயோனிக் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள்.

இரண்டு போன்களும் முழுக்க முழுக்க தொடுதிரை வசதி கொண்ட போன்கள். ஆனாலும், அட்ரிக்ஸ் 4ஜியை விட டிராய்டு பயோனிக்கின் திரை( டிஸ்பிளே) சற்று அகலமாக தெரிகிறது.

ஆம், டிராய்டு பயோனிக் 4.3 இஞ்ச் திரையும், அட்ரிக்ஸ் 4ஜியில் 4 இஞ்ச் அகலம் கொண்ட திரையும் உள்ளது. ஹைடெபினிஷன் கொண்ட இவற்றின் திரைகளில் பிம்பங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் தெள்ளதெளிவாக காணமுடிகிறது.

டிராய்டு பயோனிக்கில் 8 மெகாபிக்செல் கொண்ட கேமராவும், அட்ரிக்ஸ் 4ஜியில் 5 மெகாபிக்செல் கொண்ட கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ காலிங் செய்வதற்கு வசதியாக முகப்பு பக்கத்தில் சிறிய கேமராவும் உள்ளது. இரண்டு கேமராக்களும் 1080பி ஹைடெபினிஷன் துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்தவரை இரண்டு போன்களும் லேட்டஸ்ட் ஆடியோ மற்றும் வீடியோ தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.

வீடியோ பைல்களை ப்ளேபேக் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால், இரண்டிலும் எப் ரேடியோ கேட்கும் வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக படுகிறது. கூடுதல் மெமரி கார்டை இணைத்துக்கொள்ளவும் முடியும்.

இடிஆர் கொண்ட புளூடுத் 2.1, கம்ப்யூட்டருடன் இணைப்பு, வை-பை, 3ஜி ஹைஸ்பீடு, ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் ஆகிய அனைத்தும் பொதுவான அம்சங்களாக உள்ளது.

அதிலும், அட்ரிக்ஸ் 4ஜி போனில் 4ஜி நெட்வோர்க்கில் செயல்படும் திறனும் கொண்டது. பேட்டரி பேக்கப்பிலும் இரண்டும் பிரமாதமாக செயல்படுகின்றன.

மோட்டோரோலாவின் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரோயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன என்பது அவற்றின் மதிப்பை கூடுதலாக்குகிறது.
அட்ரிக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,750 விலையாக நிர்ணயிக்கப்பட்டு்ள்ளது. டிராய்டு பயோனிக் போனுக்கு விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
gopi

No comments:

Post a Comment